கோவை, நவம்பர் 29
நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு வரும் டிச.,2-ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மிலாடி நபியை முன்னிட்டு, தமிழக அரசு வரும் டிசம்பர் 2-ம் தேதி பொதுவிடுமுறையை அறிவித்துள்ளது. இந்த நிலையில், அன்றைய தினம் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள் மற்றும் பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.