நவம்பர் 29
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என அவருடைய சகோதரர் சத்திய நாராயணராவ் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து பரபரப்பான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கடந்த மே மாதம் சென்னையில் ரசிகர்களை அழைத்து, நாட்டில் அமைப்பு கெட்டுக் கிடக்கிறது, போருக்குத் தயாராக இருங்கள் என அவர் கூறியது அவர் அரசியல் வருகைப் பற்றிய விவாதங்களை கிளப்பி இருக்கின்றன, ரசிகர்களும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். அரசியலுக்கு வரமாட்டேன் என்று இதுவரை அவர் மறுக்கவில்லை. அரசியலில் ஈடுபடுவதற்கான ஆயத்தங்களில் ரஜினிகாந்த் ஈடுபட்டு வருவதாகவும், கட்சி பெயர், கொடி, சின்னங்களை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
விரைவில் ரசிகர்களைக் கூட்டி அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் பேச்சு அடிபட்டது. ஆனால், கமல்ஹாசன் திடீரென்று அரசியலுக்கு வருவதாக அறிவித்து இருப்பது ரஜினிகாந்தை யோசிக்க வைத்து இருக்கிறது. இதனால், அரசியலுக்கு வர அவர் தயங்குவதாகவும் கூறப்பட்டது. ஆனால், ரசிகர்கள் தரப்பில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்கின்றனர். அரசியலில் ஈடுபடுவதற்கான அனைத்து வேலைகளையும் ரகசியமாக அவர் முடித்து விட்டார். கட்சி பெயரை அறிவிப்பது மட்டுமே பாக்கி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் ரஜினி காந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், களத்தில் இறங்க வேண்டியதற்கு அவசரம் இல்லை என்றார்.
இந்நிலையில், அரசியல் கட்சித் தொடங்குவதற்கான அறிவிப்பை ஜனவரி மாதம் ரஜினிகாந்த் வெளியிடுவார் என அவருடைய சகோதரர் சத்திய நாராயணராவ் தகவல் தெரிவித்து உள்ளார். தர்மபுரியில் ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் பேசுகையில், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ல் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகாது எனக் குறிப்பிட்டார். இதனிடையே, சென்னையில் லதா ரஜினிகாந்த் பேசுகையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவருடைய தனிப்பட்ட முடிவாகும், அவருக்கு உறுதுணையாக இருப்பதுதான் என்னுடைய வேலையாகும். என்றார்.