கோவை, நவம்பர் 27
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால், கூடா நட்பு கேடாய் முடியுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
கோவை வெள்ளலூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மனிதநேய ஜனநாயகக் கட்சி போட்டியிடாது. இத்தேர்தலில் எந்த கூட்டணிக்கும் ஆதரவு இல்லை. மேலும் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. தமிழக அரசு மத்திய அரசிற்கு பணிந்து, மாநில உரிமைகளை விட்டுக் கொடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தால், கூடா நட்பு கேடாய் முடியும்.
கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி ரகுபதி என்ற இளைஞர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்