திருப்பூர், நவம்பர் 28
திருப்பூர், பாரதிநகர் பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பொட்டிகடையில் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த பெட்டிகடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்த பரதன் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் ராதாநகர், கொங்குமெயின் ரோடு ஆகிய பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நல்லாத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் (55), திருநீலகண்டபுரம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து 1 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.