நவம்பர் 23
நண்பனைக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோடு, மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு இ.சி.இ பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் கல்லூரிப் படிப்பிற்காக, காளப்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அவருடன் நீலகிரி மாவட்டம் எல்லநள்ளிப் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் பிரதீப் ஆகியோர் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஜுலை மாதம் 27-ம் தேதி அறையைச் சுத்தம் செய்வதில் சந்தோஷ், தினேஷ் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால், சந்தோஷ் கத்தியால் குத்தியதில் தினேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதைக் கண்ட பிரதீப் தினேஷை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பிரதீப் அளித்த புகாரின் பேரில், சந்தோஷ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இது தொடர்பான வழக்கு கோவை வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த நிலையில், நீதிபதி குணசேகரன், குற்றவாளி சந்தோஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.