கோவை, நவம்பர் 15: சுகாதார அலுவலருக்கு உண்டான சம்பளம், அலுவலகம், களப்பணி செய்ய வாகனங்கள் கொடுக்காமல் மெத்தனமாக செயல்படும் கோவை மாநகராட்சியை கண்டித்து, நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் சுகாதார அலுவலர் தொடங்கினர்.
கோவை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்களாக பணிபுரியும் பிச்சைமணி, சிவநேசன், அருணகிரி, ராமச்சந்திரன், திருமால், உள்ளிட்டவர்களுக்கு சுகாதார அலுவலராக அரசு ஆணை எண் 182 ன் படி பதவி உயர்வு வழங்கப்பட்டது.
உத்தரவு வழங்கப்பட்டும் இதுநாள் வரை சமபள உயர்வு, அலுவலகம், மற்றும் பணி இடம் வழங்கப்படவில்லை.
மேலும் களபணி செய்ய வாகன வசதிகள் செய்து தராமல், அமைச்சரின் உறவினரை காரணம் காட்டி இளையோர்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டு அடிமைகள் போல் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனிடையே இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய ஆட்சிப்பணி உறுதி மொழிக்கு எதிராகவும், தமிழ்நாடு மாநில லீகல் சர்வீஸ் அதராட்டி ஆணையை மதிக்காமல் செயல்படும் மாநகராட்சி ஆணையரை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பிச்சை மணி இருந்து வருகிறார்.
மாநகராட்சி ஆணையருக்கு அதிகாரம் இருந்தும், உள்ளாட்சி நகராட்சித்துறை அமைச்சரை ஆணையர் சந்திக்கச்சொல்வதை கண்டித்தும் நியாயம் கிடைக்கும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.