கோவை, நவம்பர் 5: ஈஷா அவுட்ரீச் சார்பில் இரத்த சோகை நோய் கண்டறியப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மருந்துகளும், ஊட்டச்சத்து உணவுகளும் தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது.
மத்திய அரசின் ஆயுஷ் திட்டத்தின் கீழ் ஈஷா அவுட்ரீச் சார்பில் இன்று தீத்திபாளையம் கிராமத்தில் இலவச இரத்த சோகை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு மருந்துகளும், ஊட்டச்சத்து உணவுகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட உள்ளது.
மேலும், இதுபோன்ற மருத்துவ முகாம் தேவராயபுரம் மற்றும் பூலுவப்பட்டி பகுதிகளிலும், தொண்டாமுத்தூர் ஊராட்சியின் 20 கிராமங்களிலும் அடுத்தடுத்து வரும் வாரங்களில் நடத்தப்படவுள்ளது.