நவம்பர் 5: நெல்லை தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக அரசைக் விமர்சித்து கேலிச்சித்திரம் ஒன்றை கார்ட்டூனிஸ்ட் பாலா இணையத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லையில், கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கி முத்து என்பவர் கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் இசக்கிமுத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அட்சயா ஆகியோர் உயிர் இழந்தனர்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, "லைன்ஸ் மீடியா" என்னும் இணையதளம் நடத்தி வரும் கார்ட்டூனிஸ்ட் பாலா, தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை காவல் ஆணையர் ஆகியோரை விமர்சித்து கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்திருந்தார். அதை லைன்ஸ் மீடியா தளத்திலும், தன் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். அந்தக் கேலிச்சித்திரம் ஒரு சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

இதையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்ட்டூனிஸ்ட் பாலா மீது நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் சென்னை வந்த நெல்லை காவல்துறையினர் கோவூரில் உள்ள கார்ட்டூனிஸ்ட் பாலாவின் வீட்டிற்குச் சென்று அவரை கைது செய்தனர்.