அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்- கார்ட்டூனிஸ்ட் பாலா கைது

நவம்பர் 5: நெல்லை தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக அரசைக் விமர்சித்து கேலிச்சித்திரம் ஒன்றை கார்ட்டூனிஸ்ட் பாலா இணையத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லையில், கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கி முத்து என்பவர் கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் இசக்கிமுத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அட்சயா ஆகியோர் உயிர் இழந்தனர்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, "லைன்ஸ் மீடியா" என்னும் இணையதளம் நடத்தி வரும் கார்ட்டூனிஸ்ட் பாலா, தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை காவல் ஆணையர் ஆகியோரை விமர்சித்து கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்திருந்தார். அதை லைன்ஸ் மீடியா தளத்திலும், தன் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். அந்தக் கேலிச்சித்திரம் ஒரு சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.



இதையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்ட்டூனிஸ்ட் பாலா மீது நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் சென்னை வந்த நெல்லை காவல்துறையினர்  கோவூரில் உள்ள கார்ட்டூனிஸ்ட் பாலாவின் வீட்டிற்குச் சென்று அவரை கைது செய்தனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...