கோவை, நவம்பர் 3 : ஐ.சி.எஸ்.ஐ. சார்பில் 10 முதல் 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டிகள் வரும் 9-ம் தேதி நடத்தப்படுகிறது.
கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஐ.சி.எஸ்.ஐ.யானது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய 4 மண்டலங்களை கொண்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 69 அத்தியாயங்களில் 50,000 உறுப்பினர்களும், 4.5 லட்சம் மாணவர்கள் செயலாளர்கள் மட்டத்திலான படிப்பை படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை அத்தியாயத்தின் 10-ம் ஆண்டுவிழாவையொட்டி, ”கார்ப்பரேட் வினாடி, வினாப் போட்டிகள் 2017” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டிகள் வரும் 9-ம் தேதி நடத்தப்படுகிறது. பீளமேடு அருகே உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அறிவியல் அரங்கில் நடக்கும் இந்தப் போட்டியில் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.