கோவை, நவம்பர்.3: கோவையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் இன்று காலை குழந்தை பலியாகியுள்ளது.
கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹமீது. தையற்கலைஞரான இவருக்கு ரய்யான் (2) என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் இருந்தது. இந்த நிலையில், அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
குழந்தையின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதை தொடர்ந்து கடந்த 1-ம் தேதி அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். டெங்குவுக்காக உள்ள தனி வார்டில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை குழந்தை ரய்யான் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 60க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.