குடிநீர் இணைப்பிற்கான கூடுதல் வைப்புத்தொகை செலுத்த நவ.,30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

கோவை மாநகராட்சியில் குடிநீர் இணைப்பிற்கான கூடுதல் வைப்புத்தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் நவம்பர் 30-ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக துணை விதிகளின் படி 01.10.2013 முதல் அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன் இருந்த 72 வார்டுகளில் 01.10.2013க்கு முன்னர் வீட்டு உபயோக குடிநீர் இணைப்பு பெற்ற இணைப்புதாரர்கள் கூடுதல் வைப்புத்தொகையாக ரூ.4000, வீட்டு உபயோகமல்லாத முறை இணைப்புதாரர்கள் ரூ.7000, செலுத்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு அனைத்து குடிநீர் இணைப்புதாரர்களுக்கும் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டு 15.09.2017-க்கு முன்னர் கூடுதல் வைப்புத்தொகை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 

மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் கூடுதல் வைப்புத் தொகையாக விளாங்குறிச்சி பகுதியில் (வார்டு எண் 32) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.4000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.9000, காளப்பட்டி பகுதியில் (வார்டு எண் 33,34,35 மற்றும் 36) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.5000, வீரகேரளம் பகுதியில் (வார்டு எண் 18 மற்றும் 19) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத இணைப்புகளுக்கு ரூ.5000 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

துடியலூர் பகுதியில் (வார்டு எண் 1,2,3 மற்றும் 4) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.5000, சின்னவேடம்பட்டி பகுதியில் (வார்டு எண் 27 மற்றும் 42) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.5000, சரவணம்பட்டி பகுதியில் (வார்டு எண் 28,29,30 மற்றும் 31) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.5000 மற்றும் வெள்ளக்கிணறு பகுதியில் (வார்டு எண் 26 மற்றும் 43) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.5000 வீதம் மாநகராட்சிக்கு செலுத்தக்கோரி அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

மேற்படி குடிநீர் இணைப்பிற்கான கூடுதல் வைப்புத்தொகை செலுத்த நவம்பர் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும் மற்றும் சனிக்கிழமைகளிலும் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களிலும் இத்தொகையினை செலுத்தலாம். மாநகராட்சி அனைத்து வரிவசூல் மையங்களிலும் எந்த மண்டலத்தைச் சேர்ந்த இணைப்புதாரரும் இத்தொகையினை செலுத்த இயலும். 

மேலும், 01.10.2013-க்கு முன்னர் குடிநீர் இணைப்பு பெற்று அறிவிப்பு கிடைக்கப்பெறாத இணைப்புதாரர்கள் சம்பந்தப்பட்ட வரிவசூல் மையங்களுக்கு குடிநீர் கணக்கெடுப்பு புத்தகத்தை கொண்டு சென்று குடிநீர் இணைப்பு எண்ணின் அடிப்படையில் இத்தொகையினை செலுத்திக்கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குடிநீர் இணைப்பிற்கான கூடுதல் வைப்புத்தொகையினை மாநகராட்சிக்கு தவறாமல் செலுத்தி ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...