"தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருட்டு சம்பவங்களை தடுக்க தனிப்படை"

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் புதிய ஆடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் பண்டிகை காலங்களில் புத்தாடைகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு டவுன்ஹால் மற்றும் காந்திபுரம் ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

அவ்வாறு திரளும் மக்களிடம் மர்ம நபர்கள் சிலர் பிக்பாக்கெட் மற்றும் செயின் பறிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கோவை மாநகர குற்றபிரிவு துணை ஆணையர் பெருமாள் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது :- ஒரு தனிப்படையில் ஆறு போலீசார் வீதம் மொத்தம் இரண்டு தனிப்படையில் 12 போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சாதராண பொதுமக்கள் போல உடையணிந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவார்கள். இதன்மூலம், திருட்டு சம்பங்களில் ஈடுபடுபவர்களை கையும் களவுமாக பிடிக்க முடியும். 

இதேபோல, கோவை மாநகரில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபடுபவர்களை பிடிக்க நான்கு பேர் கொண்ட தனிப்படையும், இரு சக்கர வாகனங்களை திருடுபவர்களை பிடிப்பதற்கு மூன்று பேர் கொண்ட தனிப்படையும், செயின் பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அத்தனை தனிப்படை போலீஸார்களும் மாநகரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். என்று அவர் கூறினார்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...