கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமம் அடைந்தனர். புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.


Coimbatore: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே எச்சரித்திருந்தது. அதன்படி கோவையில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், மாலை வேளையில் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.






கோவை மாநகரில் உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வேலை முடிந்து வீடுகளுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.




அதேபோன்று கோவை புறநகர் பகுதிகளான தடாகம் சாலை, இடையர்பாளையம், TVS நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. குறிப்பாக உக்கடம் பகுதியில் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு குளம் போன்று மழைநீர் தேங்கி நின்றதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானர்.




திடீர் மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மழை பெய்ததால் வெயிலில் இருந்து நிவாரணம் கிடைத்த நிலையில், வடிகால் வசதிகள் முறையாக இல்லாத பகுதிகளில் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

Newsletter

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...