கோவை கோட்ட போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இன்று இரவுக்குள் முழு ஊதிய வழங்காவிட்டால் நாளை பேருந்துகளை இயக்க போவதில்லை என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

கோவை கோட்டத்திற்குட்பட்ட கோவை,ஈரோடு,திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட்ட அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்,நடத்துனர் , மற்று பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் வெறும் 50 சதவீதம் மட்டுமே இன்று வழங்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்தை அரசு தவணை முறையில் வழங்கி வந்ததாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுவதாக தெரிவித்த தொழிலாளர்கள், இதனை கண்டித்து  நாளை பேருந்துகளை இயக்க போவதில்லை என அனைத்து தொழிற்சங்கம் சார்பாக அறிவிக்கபட்டுள்ளது. 

இதுகுறித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் கூறுகையில், கோவை கோட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே முழு ஊதிய வழங்கபடுவதாகவும் மற்ற தொழிலாளர்களுக்கு தவனை முறையிலே ஊதிய கிடைக்கப்பெறுவதாக தெரிவித்தவர்கள், இன்று இரவுக்குள் முழு ஊதியம் கிடைக்க பெறாவிட்டால் நாளை கோவை கோட்டத்தை சேர்ந்த  18 ஆயிரம் பணியாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...