நீலகிரியில் தீபாவளி கதர் ஆடைகளின் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

நாட்டின் விடுதலைக்காகவும் தன்னிகரற்ற முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்க்கையினை முழுமையாக அர்ப்பணித்த மகாத்மாவின் நினைவுகளை போற்றும் வகையில் ஒவ்வொரும் ஆண்டும் அக்டோபர் 2-ம் தேதி அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

கதர் ஆடைகளை இந்தியா முழுவதும் பரவச் செய்த பெருமையை பெற்ற அவரது பிறந்த நாளில், கதர் மற்றும் கிராமத் தொழில்களின் மூலமாக  பலகோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் உதகை மாவட்டத்திற்கு 2017-18-ம் ஆண்டிற்கு ரூ.62 இலட்சம் கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியினை அரசு அறிவித்துள்ளது. 

  • கதர் - 30 சதவீதம்
  • பட்டு - 30 சதவீதம்
  • பாலியஸ்டர் - 30 சதவீதம்
  • உல்லன் - 30 சதவீதம்


இதனிடையே, உதகை சேரிங்கிராஸில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று (02.10.2017) அவரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை காதி அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடியின் முதல் விற்பனையையும் அவர் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜினன், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...