மதபோதையில் உ.பி. அரசு- சுற்றுலா தல பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்


மத்தியில் ஆட்சிசெய்து வரும் பாஜக-வின் ஆதரவுடன் உத்தர பிரதேசத்தில் வெற்றிபெற்ற யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தொடர்ந்து மக்கள் மத்தியில் மதபோதனைகளை தினித்து வருகிறது.

இந்து மத கோட்பாடுகளின் படி செயல்பட்டு வரும் உ.பி. அரசு தொடர்ந்து பிற மதத்தினரை ஒடுக்கும் வகையிலும், மீறும் பட்சத்தில் கலவரங்களை தூண்டும் வகையிலும் கடந்த சில மாதங்களாக தீவிர முறையில் செயலாற்றி வருவதாக மக்களால் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது, உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள சுற்றுலா தல பட்டியலில் தாஜ்மஹால் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களுக்கான புதிய பட்டியலை இன்று வெளியிட்டது. அதில் உலகப் புகழ்வாய்ந்த, அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இடம்பெறவில்லை.



அதேநேரத்தில், காசி நகருக்கு அந்த பட்டியலில் முதல் இடமும், அயோத்தி ராம ஜென்ம பூமிக்கு இரண்டாவது இடமும், கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவுக்கு மூன்றவது இடமும் வழங்கப்பட்டுள்ளது பன்முகம்கொண்ட இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தினை மட்டுமே பரப்பும் வகையில் அமைந்துள்ளது.

மொகலாய மன்னர் ஷாஜகான் அவரது மனைவி மும்தாஜின் நினைவாகவும் தங்களின் காதலின் சின்னமாகவும் தாஜ்மஹாலை கட்டினார். புகழ்ப்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு ஆண்டுதோறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், உ.பி அரசின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் தாஜ்மஹால் நீக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...