தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளின் நேரம் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே மதுபாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் மதுக்கரையில் சட்டவிரோமாக மது விற்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இளைஞரை, கிராம மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மதுக்கடை திறப்பதற்கு முன்பே கல்குவாரிகளிலும், பெட்டிக் கடைகளிலும் மதுபாட்டிலை பதுக்கி வைத்து, மதுக்கரை மக்களுக்கு விநியோகித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.