கோவை தொழிலதிபரிடம் மோசடி செய்த வழக்கு - சுகேஷுக்கு அக்.,12 வரை காவல் நீட்டிப்பு

கோவையில்  கடந்த 2010-ம் ஆண்டு கணபதி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜவேல் என்பவரிடம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் மோசடி செய்தாக சுகேஷ் சந்திரசேகர் மீதும் அவரது தந்தை சந்திரசேகர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, இரட்டை இலைச் சின்னம் பெற்றுத் தர லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் டெல்லி போலீஸரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கோவை தொழிலதிபரிடம் மோசடி செய்த வழக்கில், ஆஜர்படுத்துவதற்காக டெல்லி திகார் சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் இன்று கோவை அழைத்து வரப்பட்டார் .கோவை இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை வரும் அக்டோபர் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி ராஜ்குமார் உத்திரவிட்டார். இதனையடுத்து ரயில் மூலம் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் டெல்லி அழைத்து செல்லப்பட்டார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...