கோவையில் 4 மாதங்களாக வீட்டில் கிடந்த சடலம்: போலீசார் விசாரணை

கோவை சரவணம்பட்டியை அடுத்த அண்ணாநகர் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சிவபாலன். இவருக்கு கடந்த சில வருடங்களாக குடிப்பழக்கம் இருந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சிவபாலன் மாயமாகியுள்ளார். இதனிடையே, அவரது வீட்டினுள் இருந்து இன்று துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது சிவபாலன் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

முழுவதும் சிதைந்த நிலையில் இருந்த அவரது உடலை பார்த்த போலீசார், அவர் இறந்து 4 மாதங்கள் வரை இருக்கலாம் என்று கூறினர்.

தொடர்ந்து, சிவபாலனின் உடலை மீட்ட போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...