பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ராஜவாய்க்காலை சுத்தம் செய்யும் மாநகராட்சி

கோவை வெள்ளலூரில் உள்ள ராஜவாய்க்கால், சுண்ணாம்புக் காலவாய், அணைமேடு, குறிச்சிப் பிரிவு, நஞ்சுண்டாபுரம், இட்டேரி, அண்ணா காலனி, முத்து காலனி, சேரன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500 வீடுகள் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டன.



ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து சுமார் 6.5 கி.மீ தூரம் வரை பாய்கிறது.  வெள்ளலூர் நீர்நிலைத் தொட்டி அருகே கட்டப்பட்டுள்ள மதகுகளின் மேற்புறப் பகுதி, ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை  இணைக்கும் சிறு பாதையாக மாறியிருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை பொதுமக்களின் உதவியுடன் அகற்றியது. 



குடியிருப்புகளை அகற்றிய போது மிஞ்சிய கழிவுகளும், கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகளும் ராஜவாய்க்காலில் அதிகளவில் கிடக்கின்றன. இதனால், தற்போது,  பெய்து வரும் மழையினால், ராஜவாய்க்காலில்  செல்லும் மழை நீரை அந்தக் குப்பைக் கழிவுகள் தடுத்து நிறுத்தியுள்ளன.



இதனால், ராஜவாய்க்காலில் நீர் செல்வதற்கு ஏதுவாக  பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களின் உதவியுடன் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...