வரும் அக்டோபர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி, மாவட்ட திமுகவினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஊட்டி திமுக மாவட்ட கழகமான அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்ட துணைச் செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் லாரன்ஸ், கர்ணன், ஜெயகுமாரி, மயில்வாகனம், காந்தல் ரவி, எல்கில் ரவி, நெல்லை கண்ணன், ரெணால்டு வின்சென்ட், சின்னவர், ஆலன், தேவராஜ், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.