இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் 31-ந்தேதிக்குள் அறிவிக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மதுரை உயர்நீதிமன்றத்தில்  மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் 45 ஆண்டுகளாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமாக இருந்த இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. சின்னத்தை பெறுவதற்காக அ.தி.மு.க. அணிகள் சார்பில் பிரமாண பத்திரங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ்-சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்ட போது அதிக பெரும்பான்மை உள்ள பிரிவுக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியது.

எனவே, ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் ஆகியோர் அணியில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டத்தை கூட்டி தேர்தலை நடத்த வேண்டும். அதில் வெற்றி பெறும் அணியினருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, இந்த பிரச்சனை குறித்து தேர்தல் ஆணையம் எத்தனை நாளில் முடிவெடுக்கும் என்பது பற்றி விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று (15.09.2017) நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  இரட்டை இலை சின்னத்தை யாருக்கு? என்பது குறித்து முடிவு எடுப்பதில் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.  இதனைக் கேட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தாமல் இது போன்ற பிரச்சனைகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

சமாஜ்வாடி கட்சியில் யாருக்கு சின்னம் ஒதுக்குவது என்பது குறித்து 16 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஆனால் இந்த பிரச்சனையில் மார்ச் மாதம் 2 அணிகள் சார்பிலும் மனு கொடுத்தும் தேர்தல் ஆணையம் இதுவரை முடிவு எடுக்காமல் உள்ளது.

எனவே அக்டோபர் 31-ந் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை முடிவெடுத்து தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...