நீட் தேர்வை ரத்து செய்யவும், அனிதா தற்கொலைக்கு நீதி கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதியளித்திருந்தது.
இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி வேண்டி வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூமெண்ட்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர்.

விமன் இந்தியா மூமெண்ட்டின் மாவட்ட தலைவர் ஃப்ரீத்தா பேகம் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், மத்திய மாநில அரசுகளே அனிதா மரணத்திற்கு காரணம் என்றும், உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.