கோவையில் 3-வது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்

புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 



இந்நிலையில், கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாச்சியர் அலுவலகம், அரசு பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்கள் 1000 -க்கும் மேற்பட்டோர் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். 



போராட்டம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில செயலாளர் செந்தில் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், " பழைய ஒய்வூதியம் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், நீட் தேர்வுக்கு முழு விளக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும்.



நாளை (12.09,2017) ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டமும், புதன்கிழமை திட்டமிட்டப்படி காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். மாநில அரசு உடனடியாக தங்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்". இவ்வாறு அவர் கூறினார். 

அரசு ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக 90 சதவிகிதம் அரசு துறை சார்ந்த பணிகள் கோவையில் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...