ஜி.எஸ்.டி வரியை குறைக்காவிட்டால் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும் - கோவை பம்ப் செட் உற்பத்தியாளர்கள் குமுறல்

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் படி, ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது. இதனால், பல்வேறு குறுந்தொழில் முனைவோர் அதிகமான வரி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசின் புதிய வரிக் கொள்கையால் பம்ப்செட் உற்பத்தியாளர்கள் 54% வரை வரி கட்ட வேண்டிய சூழல் உள்ளது என்றும், வரியை குறைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாக தயாரிப்பாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர். 



இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் மணிராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வரிக்கொள்கையால், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அளவுக்கு அதிகமான வரி செலுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த வரிக்கொள்கையால் சிறு தொழில் முற்றிலுமாக நலிவடைந்து விட்டது. 

பம்ப்செட் தொழிலில் மூன்று விதமாக ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுறது. மூலப்பொருட்களை வாங்கும் போது 18 முதல் 28 சதவிதம் வரி செலுத்த வேண்டியுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு 18 சதவித வரியும், பம்ப் செட் விற்பனை செய்யும் போது 12 சதவித வரியும் செலுத்த வேண்டியுள்ளது.

ஆக, 54 சதவிதம் வரை நாங்கள் வரி செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இத்தகை வரியால், பம்ப் செட் உற்பத்தியாளர்களால் தொழில் செய்ய முடியாது.

கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பம்ப் செட் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இத்தொழிலை நம்பி ஒரு லட்சம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். வரிக் கொள்கையினால் பலர் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலை நீடித்தால், வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை செய்வதப்போல், பம்ப் செட் உற்பத்தியாளர்களும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைதான் வரும். 

எனவே, வரும் ஜி.எஸ்.டி கூட்டத்திலாவது பம்ப் செட்க்கு 5% விற்பனை வரியினை மட்டும் விதிக்க வேண்டும் என்று எங்கள் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும், வரும் 8ம் தேதி கோவை மாவட்டம் முழுவதும் உள்ள பம்ப்செட் உற்பத்தியாளர்கள் ஒருநாள் கதவடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...