கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது தேவைகளை எடுத்துரைத்து மனுக்களாக வழங்கினர். மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.



தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துபோய் உள்ளதால் மாவட்டம் முழுவதிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் சராசரி மழை அளவாக வருடத்திற்கு 623.5 மி.மீ உள்ளது. ஆகஸ்ட் 2017 மாதம் வரை 225 எம்.எம் வரப்பெற்றுள்ளது. இதில் ஆனைமலை மற்றும் தொண்டாமுத்தூர் வட்டாரங்களில் அதிக மழை பொழிவு பெறப்பட்டுள்ளது. அணைகளின் நீர் மட்டம் சோலையார் அணையில் 75.20 அடியும் ஆழியார் அணையில் 67.90 அடியும் பரம்பிக்குளம் அணையில் 23.90 அடியும் நீர் இருப்பு உள்ளது. பயிர் சாகுபடி பரப்பு டிசம்பர் இதுவரை 34111 ஹெக்டேரில் ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளது.



சோளம் 6229 ஹெக்டேர், மக்காச்சோளம் 342 ஹெக்டேர், பயிறு வகைகள் 1452 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள் 2733 ஹெக்டேர், மிளகாய், கத்தரி, வெங்காயம, தக்காளி, ஆகிய காய்கறி பயிர்கள் 3809 ஹெக்டேர் அடங்கும்.

விவசாயிகளுக்கு விதை வினியோகம் செய்ய விதை இருப்பு நிலவரமானது நிலக்கடலை 6.150 மெட்ரிக் டன், பாசிப்பயறு, துவரை, உளுந்து ஆகியவை 6.515 டன்னும், மக்காச்சோளம், குதிரைவாலி, திணை உள்ளிட்டவை 0.875 டன்னும் அரசு மற்றும் தனியார் விதை கிடங்குகளில் இருப்பு உள்ளது. இவற்றினை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.

மாவட்டத்தில் உரம் இருப்பு 6343 மெட்ரிக் டன் உள்ளது. யூரியா 2898 மெட்ரிக் டன், டிஏபி 1460 மெட்ரிக் டன், பொட்டாஷ் 725 டன்னும் உள்ளது.

விவசாயிகளுக்கு இதுவரை தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி மூலம் 2155.69 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், வேளாண் இணை இயக்குநர் பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்ராஜ்சாமுவேல், வருவாய் கோட்டாட்சியர் எஸ்.மதுராந்தகி, அரசு அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...