அணிகள் இணைந்தாலும் பாஜக பிடியில்தான் அதிமுக இருக்கும் என விசிக தொல்.திருமாவளவன் பேட்டி

கட்சி நலன், ஆட்சி நலன் ஆகியவற்றை தாண்டி மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் பிடியில் இருந்து அதிமுக அணிகள் செயல்படுகிறது என கோவையில் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மத அடிப்படைவாத சக்திகளால் கோவை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்க கோவை மக்கள் மேடை என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விமானம் மூலம் இன்று கோவை வந்தார். அப்போது, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

அதிமுக இரு அணிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்ததாக அறிவிகப்பட்டாலும், அதிமுக-வினரிடையே ஒற்றுமை, கட்டுக்கோப்பு இருக்கும் என தெரியவில்லை. அதிமுகவில் புதிய அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது. தமிழக அரசியலில் மீண்டும் குழப்பம் உருவாகும். அதிமுகவில் மீண்டும் இரு அணிகள் இருக்கும் என யூகிக்க முடிகிறது.

கட்சி நலன், ஆட்சி நலன் ஆகியவற்றை தாண்டி மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் பிடியில் இருந்து அதிமுக அணிகள் செயல்படுகின்றனர்.

இரு அணிகள் இணைப்பிற்கான நிபந்தனைகள் முன் கூட்டியே பேசப்பட்டிருக்கும். அதனால் அமைச்சரவை மாற்றம் உடனடியாக நடத்தப்படுகிறது.

ஆளும் கட்சியினர் தமிழக மக்களை இளிச்சவாயர்கள் ஆக்குகின்றனர் என்ற ரீதியில் நடிகர் கமல் டுவிட்டர் மூலம் கருத்து சொல்லி இருக்கின்றார் என புரிந்து கொள்ள முடிகின்றது, அது சரிதான்.

தற்போதைய சுழலில் தினகரன் தலைமையிலான குழுவினர் என்ன முடிவு எடுக்கின்றனர் என்பதை பொறுத்து அரசு நிலைக்குமா? அல்லது அதிரடி அரசியல் மாற்றம் நடக்குமா? என்பது தெரியவரும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா-வின் வேதா இல்லம் குறித்து உயில் எழுதி வைத்திருக்கின்றாரா என்பது தெரியவில்லை. உயில் எழுதவில்லை என்றால் வேதா இல்லத்தை அரசு உடமை ஆக்குவதில் தவறில்லை.

தமிழகத்தில் ஆட்சி கவிழாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பா.ஜ.க-விற்கு கொடுக்கப்பட்டு இருக்கும். ஆட்சி கவிழ்க்கப்பட்டாலும் அடுத்த தேர்தல் வரை கவர்னர் ஆட்சியை கொண்டு வரலாம். மேலும் தமிழருவி மணியனின் ஆருடங்கள் பலித்ததில்லை.

இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...