மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பண்ணைக் குட்டைகள் அமைப்பு கோவை விவசாயிகள் மகிழ்ச்சி

கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சியில் விவசாயி இரத்தினவேலு தோட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது. 

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; பண்னை குட்டை என்பது நிலத்தில் சதுரமாகவோ, செவ்வகமாகவோ குழியைத் தோண்டி அதில் மழைநீரை சேமித்து பிற்காலத்தில் அதனை பயன்படுத்துவதே ஆகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்  திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் நிலங்களில் நில மேம்பாடு மற்றும் பணிகள் மேற்கொள்ள பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இது விவசாயின் நிலப்பரப்பு, மண்ணின்  தன்மை, தண்ணீர் தேவை, குட்டையை அமைப்பதற்கான செலவு ஆகிவற்றைப் பொறுத்துப் பண்ணைக் குட்டையின் அளவு மற்றும் ஆழத்தை நிர்ணயம் செய்யப்படுகிறது.



இதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரத்திற்குட்பட்ட 228 கிராம ஊராட்சிகளில் உள்ள சிறு, குறு, விவசாயிகளின் நிலங்களில் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள் வழங்கப்பட்டு அதனடிப்படையில் பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலங்கள் பயனாளிகளின் தேர்வு வழிகாட்டி நெறி முறைகளின் படி வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் இணைந்து நில ஆவணங்களை சரிபார்த்து ஒப்புதல் பெற்று தேர்வு செய்யப்படுகிறது. 

ஒரு பயனாளியின் நிலத்தில் அதிக பட்சமாக ரூ.1.50 இலட்சம் வரை நில மேம்பாடு பணிகள் மேற்கொள்ளலாம். குறைந்த பட்சமாக 15மீ*15மீ முதல் அதிகபட்சமாக 25மீ*25மீ  அளவில் நிலத்தின் அளவு மற்றும் வடிவத்திற் கேற்ப பண்ணைக் குட்டைகள் அமைக்கலாம். அவ்வாறு 15மீ*15மீ அளவுள்ள பண்ணைக் குட்டை அமைக்க சுமார் 25மீ*25மீ  அளவுள்ள நீலமும், 25மீ*25மீ அளவுள்ள பண்ணைக் குட்டை அமைக்க 35மீ*35மீ அளவுள்ள நிலமும் தேவைப்படும். மேலும் குட்டை வெட்டும் போது எடுக்கப்பட்ட மண்ணானது நான்குபுறமும் கரை அமைக்கப்பட்டது போக உபரியாக வரும் பட்சத்தில் அவற்றை தாழ்வாக உள்ள நிலப்பரப்பில் நிரப்பலாம் அல்லது உலர் களம், காய்கறித் தோட்டம் ஆகியவை அமைத்திடவும் பயன்படுத்தலாம். குட்டையானது குறைந்தபட்சம் 1.50மீ ஆழம் வெட்டி எடுக்க வேண்டும். மழைநீர் தேங்கும் வகையிலும், உபரி நீர் வடியும் வகையிலும் நிலம் தேர்வு செய்தல் களிமண் சிறப்பாக இருக்கும்.  

மேலும், களிமண் பாங்கான நீர் தேங்கும் தன்மையுடைய நிலம் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கு சிறப்பான தேர்வாக அமையும். மணற்பாங்கனா நிலமாக இருப்பின் 5 அடி ஆழம் தோண்டியபின் குட்டையின் அடிப்பரப்பில் சுமார் 15 செ.மீ கணத்திற்கு களிமண் பரப்பி நீர் தேக்கத்தினை அதிகரிக்கச் செய்யலாம். இந்த பண்ணைக் குட்டைகள் அமைப்பதால் வறட்சிக் காலங்களில் விவசாய நிலங்களில் பயிர்களைக் காத்திட பயன்படுகிறது. கால்நடைகளின் சுகாதாரமான பராமரிப்பு மற்றும் அவற்றின் குடிநீர் உபயோகத்திற்கு பயன்படுகிறது. மழைநீர் விரையமாகாமல் நிலத்தடி நீர் சேமிக்கும் அமைப்பாக செயல்படுகிறது. மீன்வளத்தைப் பெருக்குதல், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் அருகிலுள்ள ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்தவெளிக் கிணறுகளின் நீர்மட்டம் உயர்கிறது.  

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு விவசாய வேலையில்லாத காலங்களில் மீன்வளர்ப்புத் தொழில் மூலம் இதர வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.  ஆறு மற்றும் வடிகால்களில் நீர் மட்டம் குறையும் காலங்களில் இவ்வாறான நீர் நிலைகளில் ஆழமான பகுதிக்கு வருவதன் மூலம் மீன்கள் மடிவதைத் தவிர்க்க முடியும். பண்ணைக்குட்டை அமைப்பதனால் மழைக்காலங்களில் மழைநீர் வீணாகாமல் பண்ணைக்குட்டையில் தேக்கி வைப்பதனால்; கிராம ஊராட்சிகளில் விவசாய நிலங்களில் பண்ணைக் குட்டை மனித சக்தியின் மூலமாக அமைப்பதன் மூலம் மானாவாரியில் மழையை எதிர்பார்க்காமல் பயிரை சாகுபடி செய்யலாம். மின்சார நீர் ஏற்றத்தின் மூலமாகவோ நீரை விவசாய நிலங்களுக்கு பாசன வசதி செய்யலாம். 

வறட்சி காலங்களில் பயிர்களுக்கு நீர் பாசனத்திற்கு பயன்படுவதால் வருடம் முழுவதும் பயிர் சாகுபடி செய்வதோடு அதிக மகசூல் பெற ஏதுவாக இருக்கும். பண்ணைக்குட்டையின் கரைகளில் பழ மரங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்வதால் விவசாயிக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் அரிய சத்தான உணவும் கிடைக்கிறது. பயிர் சாகுபடியில் செய்ய வேண்டிய வேலைகளை சரியான பருவத்திலும் நேரத்திலும் செய்வதால் விவசாயிகளின் தன்னம்பிக்கை அளவு அதிகரிக்கிறது என அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கநர் ரூபன் சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பார்த்திபன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...