போதுமான வசதிகள் இன்றி நடத்தப்பட்ட சுதந்திர தின விழா- குடிநீர் கூட வழங்க மறுத்ததால் பத்திரிகையாளர்கள் ஏமாற்றம்

நாட்டின் 71-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்று கொடி ஏற்றி வைத்து பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசுத் துறை சார்ந்தவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். காலை 8 மணி முதலே நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிக்க பல்வேறு அச்சுத்துறை மற்றும் ஊடகங்களை சேர்ந்த நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அங்கு வந்திருந்தனர்.

இந்நிலையில் அதிகாரிகளை கவனிக்கவே இவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. இதனால் அங்கு செய்தி மற்றும் புகைப்படம் எடுக்க வந்திருந்தவர்கள் கொடியேற்று விழா மற்றும் அணிவகுப்பு முடிந்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கபட்டிருந்த குடிநீரை கேட்க, உங்களுக்கு இங்கு வழங்க முடியாது என அங்கிருந்தவர்கள் கூறியதால் கோபமடைந்த பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து செய்தி தொடர்பு அதிகாரியை தொடர்பு கொண்டு தெரிவித்த பின்னர் குடிக்க குடிநீரும்,தேனீரும் அளிக்கப்பட்டது.

இதனிடையே, வ.ஊ.சி பூங்காவினில் உள்ள மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் கழிவறைகள் மூடப்பட்டிருந்தது. விழா நடைபெறும் இடத்தின் அருகே உள்ள ஒரே ஒரு கழிவறையை மட்டுமே அங்கிருந்தவர்கள் உபயோகிக்க வேண்டிய சூழ்நிலையினை ஏற்படுத்தியிருந்தனர். 

மேலும், அரசு சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழில் 71-வது சுதந்திர தின விழா என இல்லாமல் 70-வது சுதந்திர தின விழா நற்சான்றிதழ் என அச்சிடப்பட்டு தனியார் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அரசு விழாக்களில் அதிக கவனம் எடுத்துப் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...