வால்பாறையில் தென்மேற்கு பருவ மழை ஜீன் மாதம் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது ஜீன் மாதம் இறுதியில் தொடங்கி தொடர்து மழை பெய்து வருகிறது. வால்பாறையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நடுமலை ஆறு, கூலாங்கல் ஆறு, சிறுவர் பூங்கா ஆறு அகியவற்றில் வெள்ளப்பெருக்கு அதிக அளவில் காணப்பட்டது.

இதனால், வால்பாறை பகுதியில் உள்ள சோலையாறு அணையில் தற்போது நீர்மட்டம் 63 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 160அடி ஆகும். இதுவரை வால்பாறையில் குறைந்த அளவு மழை பெய்து வந்துள்ளது. கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு மழை குறைவாகவே பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.