கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை செம்மொழிப் பூங்காவில் இருந்து டாடாபாத் வரை கொடி அணிவகுப்பு நடத்துகிறது. இதனால், டவுன் பஸ் ஸ்டாண்ட், நஞ்சப்பா ரோடு, கிராஸ் கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் ஆர்.வி. ரவுண்டானா மற்றும் ஜி.டி சிக்னல் வழியாக மாற்றி விடப்படும்.


Coimbatore: கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை சார்பில் இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை கொடி அணிவகுப்பு நடைபெற உள்ளது.

இந்த அணிவகுப்பு செம்மொழிப் பூங்காவில் தொடங்கி நஞ்சப்பா ரோடு, கிராஸ் கட் ரோடு வழியாக டாடாபாத் வரை நடைபெறும். இதனால், பொதுமக்களின் போக்குவரத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

செம்மொழிப் பூங்காவில் இருந்து அணிவகுப்பு தொடங்கும் போது, டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் வாகனங்கள் ஆர்.வி. ரவுண்டானா வழியாக மாற்றி விடப்படும். அதேபோல், அணிவகுப்பு கிராஸ் கட் ரோடு வழியாக செல்லும் போது, அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஜி.டி சிக்னல் வழியாக மாற்றி விடப்படும்.

பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு மாற்று வழித்தடங்களை பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...