கோவையில் வனமகோத்சவம் சார்பில் மரம் நடும் விழா

கோவை, சிங்காநல்லூர் குளம் அருகே வனமகோத்சவம் சார்பில் இன்று மரம் நடும் விழா நடைபெற்றது. இதில், மருதமரம், பணங்கொன்றை, பச்சை கிழுவை, பொங்கினம் உள்ளிட்ட 50 வகையான 500 மரங்கள் நடப்பட்டன. 

ஜூலை 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை இந்தியா முழுக்க நடைபெறும் இந்த வனமகோத்சவம் விழாவில் மியாவாக்கி முறையில் ஆயிரக் கணக்கான மரங்கள் அருகருகே நடப்படும். சுற்றுச்சூழலை பராமரிக்கவும், இயற்கையை பேணிக்காக்கும் வகையிலும் நகர்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் ஆய்வு மையம் மற்றும் மாநகராட்சி இணைந்து (க்யூப் அமைப்பு) இந்த விழா நடத்தப்படுகிறது.



இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், சலீம்அலி பறவைகள் சரணாலயம் இயக்குநர் சங்கர், கோவை வனச்சரகம் கன்சர்வேரா வனஅதிகாரி ஞானசுப்பிரமணியம், வெள்ளலூர் 105 அதிவிரைவுப் படை இணை கமாண்டர் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.



கடந்த 2015 ஆம் ஆண்டு சிங்காநல்லூர் குளம் அருகே சுமார் 4 கிலோ மீட்டர் பரப்பளவில் மரங்கள் நடப்பட்டன. இந்த ஆண்டு சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் 2000 மரங்கள் நடப்பட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பகுதியில் தற்போது 120 வகையான மரங்கள் நடப்பட்டு மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்களால் ஞாயிறுதோறும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வனமகோத்சவம் சார்பில் மரம் நடும் விழாவில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...