கோவையில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள நல உதவிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கோவை மாவட்டத்தில் வசித்து வரும் தாழ்த்தப்பட்டோர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்து புதுடெல்லி தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத்தலைவர் முருகன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையிலும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் புதுடெல்லி தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத்தலைவர் முருகன் பேசியதாவது:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தாழ்த்தப்பட்டோர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள் அறிவிக்கப்படும் திட்டங்களை உரிய முறையில் கொண்டு சேர்ப்பது அரசுத்துறை அலுவலர்களது முக்கிய பங்கு ஆகும். மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசுப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவைச்சார்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் கோரப்படும் புசழரி-கள் அவர்களது விருப்பத்திற்கேற்ப வழங்கப்படுதல் வேண்டும். தாழ்த்தப்பட்ட பிரிவைச்சார்ந்த மாணவ, மாணவியற்கும் பள்ளிகளில் சேர்க்கையின் போது முன்னுரிமை அளித்திடவும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து சலுகைகளும் எவ்வித தடங்கலுமின்றி சேருதல் வேண்டும்.

அதேபோல், விடுதிகளில் தங்கி படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என அடிக்கடி மாவட்டத்தில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தேவைப்படும் வசதிகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி அடிப்படை வசதிகள் பெற்று தருவதில் முனைப்பாக செயல்பட வேண்டும்.

மேலும், மனித கழிவுகளை அகற்றும் பணிக்கு கூடுமானவரை இயந்திரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். போதிய இயந்திரங்கள் இல்லையெனில் அரசுக்கு அறிக்கை அனுப்பி தேவைப்படும் இயந்திரங்களை பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தற்சமயம் மனித கழிவுகளை அகற்றிட ஊழியர்களை பயன்படுத்தி வந்தால் அவர்களது ஊதியத்தில் எவ்வித நிலுவைத்தொகையும் பிடித்து வைத்தல் கூடாது. மேலும், அவர்களுக்கு தேவைப்படும் கையுறைகள், காலணிகள், உயிர் காக்கும் உபகரணங்கள் அனைத்தும் தரமானதாக வழங்கப்பபடுதல் வேண்டும்.

பாரத பிரதமரின் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகுப்பு வீடுகள் (புசழரி hழரளநள)  தகுதியுடைய மக்களுக்குதான் சென்றடைகின்றதா எனவும், வழங்கப்பட்ட பின் அவ்வீட்டின் உரிமையாளர்தான் வசீக்கின்றாரா? என அவ்வப்போது ஆய்வு செய்தல் வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அரசிடமிருந்து கிடைக்கப்பெறும் சலுகைகள் பற்றிய விபரத்தினை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக எந்ததெந்த வகையில் கொண்டு சேர்க்க முடியுமோ அத்தனை வகைகளையும் கையாண்டு அம்மக்களுக்கு சென்றடைய உதவிகரமாக மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும் எனக் கூறினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் என்.மதியழகன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (பொள்ளாச்சி) காய்த்ரி கிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) ச.மதுராந்தகி, வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) சின்னசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வே.மோகன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...