கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் கொடியேற்றத்துடன் மகா கும்பாபிஷேக விழா துவக்கம்

கோவை சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவிலில் 48-வது ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு சனிக்கிழமையன்று (நேற்று) இரவு 7 மணியளவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கப்பட்டது. இந்த வழிபாட்டு நிகர்ச்சில் கோவில் தந்திரி சிவபிரசாத்நம்பூதிரி தலைமை வகித்தார். இந்து சமய இணை ஆணையாளர் ஆ.இளம்பரிதி முன்னிலை வகித்தார். 



இதனைத்தொடர்ந்து, நாளை (ஜூன் 26) 2-ம் நாள் திருவிழாவையொட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் ஐயப்ப சேவா சங்கத்தின் 62-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.



தொடர்ந்து, ஜூலை 1ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் பட்டிமன்றம், யானைகளுடன் ரதம், செண்டை வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.



திருவிழா நாட்களில் தினமும் காலையில் யானை வாத்தியத்துடன் சிறப்புப் பூஜைகளும் நடைபெறவுள்ளது.



கோவையில் பிரசிதிபெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலின் இச்சிறப்பு வழிபாட்டினைக் காண கோவை மட்டுமின்றி திருப்பூர், சேலம் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்ட மக்களும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...