கோவை கங்கா மருத்துவமனையில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்



இந்தியாவில் முதல் முறையாக ஏர் ஆம்புலன்ஸ் சேவை கோவையில் செயல்பட்டு வரும் கங்கா மருத்துவமனையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 

கோவையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையான கங்கா மருத்துவமனை சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை வரும் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. விபத்தின் போது காயமடைபவர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு வரவும், இருதய நோயாளிகள், உடல் உறுப்பு தானம் போன்றவற்றிக்கு இந்த சேவை அதிகளவில் உதவியாக இருக்கும். இந்த ஏர் ஆம்புலன்ஸில் 2 விமானிகள் 1 நோயாளி 1 மருத்துவர், 1 நோயாளியின் உறவினர் பயணிக்கலாம்.



மேலும், இதற்காக விமான போக்குவரத்துத் துறை அனுமதியுடன் பிரத்யேகமாக ஹெலிப்பேடு அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் இந்த ஹெலிகாப்டரில் வைக்கப்பட்டு உள்ளது.



இரண்டு விமானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவைக்கு 1 மணி நேரத்திற்கு 1.25 லட்சம் வரை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கங்கா மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்று இந்த ஏர் அம்புலன்ஸ் சேவையின் பயண்பாடுகள் குறித்தும், மருத்துவர்கள், விமானிகள் உள்ளிட்டோர் அவசர கால பணிகள் குறித்தும் ஒத்திகை நிகழ்த்தினர்.



இதுகுறித்து, கங்கா மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், 1999 காலகட்டத்தில் நடைபெற்ற கார்கில் போரின் போது பாதிக்கப்பட்ட ஏராளமான போர் வீரர்கள் விமானம் மூலம் டெல்லி, காஷ்மீர், சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டனர். 17 இந்திய விமானங்களை ஏர் ஆம்புலன்ஸ் ஆக மாற்றலாம்.

1999 கார்கில் போருக்கு பிறகு இந்திய விமானப் படை ஏர் ஆம்புலன்ஸ் 2007-ல் துவங்கப்பட்டது. அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க இதில் அனைத்து வசதிகளும் உள்ளது. தனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோல்டன் ஹவரில் காப்பாற்றப்பட்டேன். இதனாலேயே இந்த ஏர் ஆம்புலன்ஸ் முக்கியத்துவத்தை நான் அறிந்தேன். இம்மாதிரியான சேவைகளால் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவ சேவை அளிக்க வாய்ப்புகள் உள்ளது" என்றார்.

இந்நிகழ்ச்சியின் போது, டாக்டர். ராஜசேகரன், டாக்டர். சண்முகநாதன், டாக்டர். ராஜசபாபதி, கணக வள்ளி சண்முகநாதன், ஏர் மார்ஷல் அனில் பெகல், ஏர் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவா, மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...