வேளாண் பல்கலையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் மூன்றாவது ஆண்டாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு. ராமசாமி தலைமையுரை வழங்கினர்.



அப்போது அவர் பேசுகையில், வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சி மூலம் உற்பத்தியை பெருக்கி, பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்கும் கடமை இருப்பதால் தங்களை உடலிலும், மனதிலும் உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் யோகாக்கலையே அதற்கு பெரிதும் துணைபுரியும். சற்றே மாறுபட்டாலும் குருகுல முறை இந்தியாவில் தொன்றுதொட்டு பயன்பாட்டில் உள்ளதை யோகாக்கலை மூலம் தெளிவாக அறியலாம்.



யோகாக்கலை அறிவியல் பூர்வமானது, இதனை கடைபிடிப்பதில் உடல் நலம், மன நலம் இரண்டும் ஒருங்கே பெற்று மாணவர்கள் வாழ்வில் முன்னேற முடியும் என்றும் கூறினார்.

கோவை மண்டலத்தின் உலக சமுதாய சேவை மையத்தின் தலைவர் ரா.பச்சையப்பன் மற்றும் செயலாளர் மற்றும் இணை இயக்குனர் (விரிவாக்கம்) பி.ஹரிதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



பின்னர் மாணவ, மாணவியர் அமர்ந்த நிலை மற்றும் நின்ற நிலையில் செய்யும் பயிற்சிகள், "TNAU" என்ற எழுத்துக்கள் வடிவில் நிற்றல் மற்றும் கண் பயிற்சி போன்றவற்றை செய்தனர். பல்கலைக்கழக மாணவர்களின் யோகா செயல் விளக்கம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.



விழாவிற்கு பல்கலைக்கழக பதிவாளர் சி.ஆர்.ஆனந்தகுமார், வேளாண் கல்லூரி முதன்மையர் ச.மகிமைராஜா மற்றும் பேராசிரிகர்கள் பங்குக் கொண்டு சிறப்பித்தனர். உலக சமுதாய சேவை மைய யோகா ஒருங்கிணைப்பாளர் ரமா ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். டி.அருன் குமார் முதலாமாண்டு (வேளாண்மை) மாணவர் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...