கோவை வேளாண் பல்கலையில் இரண்டாம் தர கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் வழங்கக் கோரி பெற்றோர்கள் போராட்டம்


கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக கலந்தாய்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், நீட் தேர்வின் முடிவிற்கு பின் மருத்துவ படிப்பிற்கு சென்று விட்டால் கட் ஆப்பில் அடுத்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு இடம் வழங்கக்கோரி பெற்றோர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இளங்கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று துவங்கியது. இதில் 200 முதல் 197 வரை கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். முதல் நாளில் 397 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த கலந்தாய்வில் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், தேர்வு முடிவுகளுக்கு பின்னர் மருத்துவ படிப்பிற்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர். 

இந்நிலையில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளுக்கு பின்னர், மருத்துவ படிப்புகளுக்கு சென்றால் காலியாகும் இடங்களுக்கு கட் ஆப்பில் அடுத்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு வழங்கக்கோரி பெற்றோர்கள் பல்கலைகழக டீன் மகிமைராஜா அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை பல்கலைகழக நிர்வாகம் ஏற்க மறுத்ததால் அதிகாரிகளுடன் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவும், அத்தேர்வு முடிவுகளுக்கு பின்னர் வேளாண்மை பல்கலைகழக கலந்தாய்வை நடத்தி இருக்க வேண்டுமென பெற்றோர்கள் தெரிவித்தனர்.

அரசு விதிகளுக்கு உட்பட்டே கலந்தாய்வு நடத்தப்படுவதாகவும், மறு கலந்தாய்வு நடத்த வாய்ப்பில்லை எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...