பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதாகக் கூறி கோவை மத்திய சிறையில் மாவோயிஸ்ட்டுகள் உண்ணாவிரதம்


கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் மாவோயிஸ்ட்டுகள் 5 பேரை தமிழக கேரள கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீது போலி சிம் கார்டு, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யக்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கேரள மற்றும் ஆந்திராவிலும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதல் கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ள மாவோயிஸ்ட்டு இயக்கத்தினை சேர்ந்த அனூப்பை சந்திக்க கடந்த வாரம் சிறைச்சாலைக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஷீத் மற்றும் சர்மா ஆகியோர் வந்திருந்தனர். அப்போது, அவர்கள் சிறை விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்றதாக ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இதனைக்கண்டித்து மத்திய சிறையில் உள்ள அனூப் மற்றும் வீரமணி ஆகியோர் மத்திய சிறைசாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...