வங்கி கடன் பெற தவறான ஆவணங்கள் சமர்ப்பிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை- நிறுவனங்கள் பதிவாளர் ஜோஸ்குட்டி எச்சரிக்கை

பதிவு செய்யப்பட்ட செயல்படாத நிறுவனங்கள் வங்கி கடன் பெற தவறான ஆவணங்களை தயாரித்து தருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனங்களின் பதிவாளர் ஜோஸ்குட்டி எச்சரித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனங்களின் பதிவாளர் ஜோஸ்குட்டி கூறியதாவது:-

கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பதிவு செய்தும் இருப்புநிலை ஆவணங்களை பதிவு செய்யாமல், செயல்படாமல் உள்ள ஷெல் நிறுவனங்கள் எனப்படும் 5 ஆயிரத்து 766 நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள் 12 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மத்திய பதிவேட்டில் இருந்து நீக்கப்படுவார்கள்.

அவ்வாறு பெயர் நீக்கம் செய்யப்படும் இயக்குனர்கள் செயல்பாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களில் இயக்குனராக இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை இதனால் உருவாகும். செயல்படாமல் உள்ள 1500-க்கும் மேற்பட்ட இத்தகைய ஷெல் நிறுவனங்கள் வங்கிகளில் சுமார் 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று செலுத்தாமல் இருப்பதால், இத்தகைய வாராக்கடன் மிகப்பெரிய பொருளாதார மோசடியாக கருதப்படும் எனவும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு தகவல் அளிக்கப்பட உள்ளது. 

இந்த ஷெல் நிறுவனங்கள் தொடர்பாக வருமான வரித்துறை, கலால் மற்றும் வணிக வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது அத்துறைகள் மூலம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான தொகை 36 ஆயிரம் ரூபாயில் இருந்து 500 ரூபாயாக குறைக்கப்பட்டு முழுமையாக இணையம் மூலம் பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளதால் மிக சுலபமாக நிறுவனங்களை பதிவு செய்ய முடியும்" என ஜோஸ்குட்டி தெரிவித்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இத்தகைய செயல்படாமல் இருந்த நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்நிறுவங்கள் மத்திய பதிவேட்டில் இருந்து நீக்கப்படும் போது அந்நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...