கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோவையில் அமைந்துள்ள ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்த தன்னார்வ அமைப்பில், 150-க்கும் மேற்பட்ட உறுப்பிணர்கள் இணைந்து இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனுடன், நமது கோவை நமது பசுமை இயக்கமும் இணைந்து நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதன்படி, இன்று 18-வது வார களப்பணியாக கோவை சுண்டக்காமுத்துர் பகுதியில் உள்ள பல நூற்றாண்டு பழமையான கிணற்றினை தூய்மை படுத்தும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, குனியமுத்தூர் செங்குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு கரை அமைக்கும் பணியில் இன்று நான்கு ஜே.சி.பி இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் நமது கோவை நமது பசுமை இயக்கம் தொடர்பான மேலும் தகவலுக்கு 8015714790, 94432 37422, 9789143103 என்ற தொலைபேசி அல்லது email:[email protected] என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.