கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஆழி கிணற்றில் தூர்வாரும் பணி துவக்கம்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோவையில் அமைந்துள்ள ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்த தன்னார்வ அமைப்பில், 150-க்கும் மேற்பட்ட உறுப்பிணர்கள் இணைந்து இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனுடன், நமது கோவை நமது பசுமை இயக்கமும் இணைந்து நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.



இதன்படி, இன்று 18-வது வார களப்பணியாக கோவை சுண்டக்காமுத்துர் பகுதியில் உள்ள பல நூற்றாண்டு பழமையான கிணற்றினை தூய்மை படுத்தும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, குனியமுத்தூர் செங்குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு கரை அமைக்கும் பணியில் இன்று நான்கு ஜே.சி.பி இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் நமது கோவை நமது பசுமை இயக்கம் தொடர்பான மேலும் தகவலுக்கு 8015714790, 94432 37422, 9789143103 என்ற தொலைபேசி அல்லது email:[email protected] என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...