காட்டு யானை தாக்கி வேட்டைத் தடுப்பு காவலர்கள் இருவர் காயம்

தமிழக வனத்துறை வேட்டைத் தடுப்பு பிரிவு காவலர்களாகிய கார்த்திகேயன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவர் கோவை பி.கே.புதூர் வனப்பகுதியில் கடந்த புதனன்று (மே 31) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காட்டு யானை தாக்கி படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது ஒரு காட்டு யானை வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றது.

அறிவொளி நகர், குரும்பம்பாளையம், பி.கே.புதூர், தர்மலிங்கேஷ்வரர் கோவில், ராணுவ முகாம் உள்ளிட்ட பகுதிகளில் அந்த ஒற்றை காட்டு யானை சுற்றிவந்துள்ளது.

இதனை தடுத்து, மதுக்கரைக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அந்த யானையினை விரட்ட வனத்துரையினர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வேட்டைத் தடுப்பு பிரிவு காவலர்களாகிய கார்த்திகேயன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவர் கோவை பி.கே.புதூர் வனப்பகுதியில் கடந்த புதனன்று (மே 31) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை அங்கிருந்த கார்த்திகேயன் மற்றும் விஜயகுமாரை கடுமையாக தாக்கியுள்ளது.

இதில், இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்கைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேட்டைத்தடுப்பு காவலர் கார்த்தியேனுக்கு அதிகப்படியான காயங்கள் மற்றும் உடலில் எழும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...