கோவை மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி

கோவை மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட 46 பேருக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான காசோலை சம்மந்தப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

கொலை, கொள்ளை போன்ற குற்றசம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சிறைத்துறை சார்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வழக்குகளுக்கு ஏற்றவாறு 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

இந்த நிதி உதவி மண்டல நன்னடத்தை அலுவலர் அறிக்கையின் படி மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் அடிப்படையில் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. நிதி உதவி பெருவோர் பட்டியலை வெளியிடுவார்.

அதன்படி, கோவை மத்திய சிறை வளாகத்தில் சிறைத்துறை சரக துணை தலைவர் அறிவுடை நம்பி தலைமையில் இன்று நடைபெற்ற நிதி உதவி வழங்கும் விழாவில், சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட 46 பேரின் 30 வழக்குகளுக்கு ரூ.16 லட்சம் வழங்கப்பட்டது.

பெரும்பாலும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இந்த நிதி உதவி, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட எதிர்கால தேவைகளுக்கு பயன்படும் நோக்கில் இந்த திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விழாவில், சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மண்டல நன்னடத்தை அலுவலர் சூர்யமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...