தமிழக முதலமைச்சருக்கு வல்லார கீரை, வெண்டைக்காய் மற்றும் மாத்திரைகள் அனுப்பி தமிழ் புலிகள் அமைப்பினர் நூதன போராட்டம்


பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டி முடித்தது உள்ளிட்டு தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் மறந்து அதிகமாக கட்சி செயல்பாடுகளில் மட்டுமே தமிழக முதலமைச்சர் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கு தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை நினைவுகூறும் வகையிலும் தமிழக முதலமைச்சருக்கு வல்லாரை கீரை, வெண்டைக்காய் மற்றும் ஞாபக சக்திகளை அதிகரிக்கும் மாத்திரைகளை அஞ்சல் மூலம் அனுப்பும் போராட்டத்தில் இன்று தமிழ் புலிகள் அமைப்பினர் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அஞ்சல் நிலையத்திற்கு முதலமைச்சருக்கு அனுப்ப வல்லாரை கீரை, வெண்டைக்காய், மாத்திரைகள் உள்ளிட்டவற்றை தமிழ் புலிகள் அமைப்பினர் கொண்டுவந்தனர். அப்பொருட்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், போலி டாஸ்மாக் கடைகள், பள்ளி கல்வி துறையில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தற்போது உள்ள நிலையில் தமிழக அரசு மக்கள் மீது எவ்வித அக்கறையுமின்றி செயல்பட்டு வருகிறது.

எனவே, எடப்பாடி பழனிசாமி தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதை அவருக்கு ஞாபகப்படுத்தும் விதமாக தமிழ் புலிகள் சார்பில் வல்லாரை கீரை, வெண்டைக்காய் மற்றும் மாத்திரைகளை அனுப்பி வைக்கவுள்ளோம் என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...