கோவையில் தனியார் பள்ளிகளில் இடஒதுக்கிடு முறை பின்பற்றுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு

கோவையில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை எனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்ட துணை ஆட்சியரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரியுமான மோகன் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை- திருச்சி சாலையில் உள்ள புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்தும், மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி மோகன் தெரிவித்தார். மேலும், இந்த ஆய்வு தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் நடத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...