தமிழர்களை இழிவுபடுத்தியதாக புகார் - ரஜினிகாந்த் கொடும்பாவி எரிப்பு.


நடிகர் ரஜினிகாந்த் தமிழர்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி, கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ரஜினியின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர்.

ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதை சமூக வலைதளங்களில் பலர் இழிவுபடுத்தி பேசி வருவதாகவும், தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு கீழ்தரமாக போய்விட்டார்கள் என தமிழர்களை இழிவுபடுத்தியதாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழர்களை இழிவுபடுத்தி ரஜினிகாந்த் பேசியதை கண்டித்து, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் பதிப்பகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியபடி, கொடும்பாவியை எரித்து போராடட்ம் நடத்தினர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வதை தாங்கி கொள்ளமுடியாமல், ஒட்டு மொத்த தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் ரஜினி பேசியிருப்பதாக அக்கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் குற்றம்சாட்டினார்.

தமிழ் மக்கள் என்னை வாழவைத்தவர்கள் என பேசும் ரஜினி தமிழர்களை இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது எனவும், தனது திரைப்படங்கள் வெளியிடும் போது எல்லாம் அரசியலுக்கு வருவதாக நாடகம் ஆடுவதாக கூறிய அவர், ரஜினிகாந்த் இந்த பேச்சிற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...