மாநகராட்சி தெற்கு மண்டலப் பகுதியில் மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு


கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 92-வது வார்டுக்குட்பட்ட நரசிம்மபுரம் பகுதியில் புதிதாக அமையவுள்ள மாநகராட்சி பூங்காவை கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று நீர்த் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதையும், பொதுமக்கள் தேக்கிவைத்துள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, நரசிம்மபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்கத் தொட்டியினையும், மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் ப.காந்திமதி ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதியுடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...