கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்கள் 'SWACHHATA HI SEVA 26' என்ற எழுத்து வடிவில் அணிவகுத்து நின்று கழுகு பார்வையில் விழிப்புணர்வு காட்சி படமாக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது, குப்பைகளை 4 வகையாக பிரித்து கையாளுவது ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கணியூர் இரா. சரவணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கணியூர் ஊராட்சி மற்றும் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.



பொதுமக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது மற்றும் குப்பைகளை 4 வகையாக பிரித்து முறையாக கையாளுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து 'SWACHHATA HI SEVA 26' என்ற எழுத்து வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கழுகு பார்வையில் எடுக்கப்பட்ட இந்த காட்சி, தூய்மை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அமைந்தது.



நிகழ்ச்சியில் கணியூர் இரா. சரவணன், தனி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கள சத்யா, ஊராட்சி செயலர் ஆர். ஜெகதீசன், ஊராட்சி பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...