கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுபேர், முபாரக், ரபிக் அல் ஹாசன் ஆகிய 4 பேருக்கும் பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் இன்று (25.09.2026) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. துடியலூர் அடுத்த சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்த சசிகுமார் (37), 2016 செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவையில் பெரும் பதற்றமும் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. வழக்கு பின்னர் மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்படி என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.


Coimbatore: கோவையை சேர்ந்த இந்து முன்னணி செய்தி தொடர்பாளர்சசிகுமார் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கோவை துடியலூர் அடுத்த சுப்பிரமணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (37). இவர் கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போது, மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் பெரும் பதற்றமும், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின.

ஆரம்பத்தில் கோவை மாவட்ட காவல் துறையினர் விசாரித்த இவர்களது வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டிக்கு (CB-CID) மாற்றப்பட்டது. பின்னர் இவ்வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணைக்கு மாற்றப்பட்டது.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (PFI) அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுபைர் உள்ளிட்டோர் மீது என்.ஐ.ஏ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பயங்கரவாத பீதியை ஏற்படுத்தி ஒரு பிரிவினர் மத்தியில் கலவரத்தை உண்டாக்க இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதாக என்.ஐ.ஏ குறிப்பிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சதாம் உசேன், சுபேர், முபாரக், ரபிக் அல் ஹாசன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் இன்று (25.09.2026) தீர்ப்பு வழங்கி உள்ளது.

Newsletter

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...